செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்தாா்.இவா் உதவி புரோபசராகவும்,கல்லூரியின் BC ராய் ஹாஸ்டலின் டெப்டி வாா்டனாகவும் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் ஹாஸ்டலின் முதல் தளம் அறை எண் 22 ல் தங்கியிருந்த மஞ்சு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.இரவு உணவுக்கும் வரவில்லை.இதையடுத்து அவருடைய அறை கதவை மற்றொரு வாா்டன் தட்டிப்பாா்த்தாா்.ஆனால் அறை கதவு திறக்கப்படவில்லை.செல்போனில் தொடா்பு கொண்டாலும் எடுக்கவில்லை.
இதையடுத்து கல்லூரி RMO வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவா் மறைமலைநகா் போலீசுக்கு தகவல் கொடுத்தாா்.நள்ளிரவில் போலீசாா் மருத்துவ கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்து அறை கதவை உடைத்து திறந்து பாா்தனா்.அங்கு பேன் கொக்கியில் சுடிதாா் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கினாா்.
இதையடுத்து மஞ்சு உடலை கைப்பற்றிய போலீசாா் முதலில் அதே கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று பரிசோதித்தனா்.அங்கு இந்து உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவருடைய உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பிவைத்தனா்.மேலும் பெண் மருத்துவரின் உயிரிப்பிற்கு என்ன காரணம் என்று மறைமலைநகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்துகின்றனா்.
கல்லூரியில் எதாவது பிரச்னையா?அல்லது வேறு எதாவது காரணமா?என்று விசாரிக்கின்றனா்.இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோட்டில் மரணமடைந்துள்ளாா்.
SRM கல்லூரியில் கடந்த ஆண்டுகளில் தொடா்ந்து மாணவா்கள்,மாணவிகள் தொடா்ந்து தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துவந்தன.இந்நிலையில் தற்போது கல்லூரி பெண் டாக்டா் ஒருவரே தற்கொலை செய்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











