Home அரசியல் சென்னையில் அமைகிறது உச்ச நீதிமன்ற கிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு

சென்னையில் அமைகிறது உச்ச நீதிமன்ற கிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு

138

சென்னையில் அமைகிறது உச்ச நீதிமன்ற கிளை: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு

இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக, உச்ச நீதிமன்றத்தின் நான்கு புதிய மண்டல கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தர கிளைகள் அமையவுள்ளன.

வடக்கு மண்டலத்தில் புதுடில்லி. தெற்கு மண்டலத்தில் சென்னை. கிழக்கு மண்டலத்தில் கொல்கத்தா. மேற்கு மண்டலத்தில் மும்பை ஆகிய இடங்களில் கிளைகள் அமைகிறது.

புதுடில்லியில் ஒரு தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் செயல்படும்.

சென்னையில் அமையவுள்ள தெற்கு மண்டல கிளை, உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்படும். அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்த மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு
விசாரிக்கப்படும்.

இதன் மூலம் தென்னிந்திய மக்கள் டில்லிக்குச் செல்லும் அலைச்சலும் செலவுகளும் பெருமளவு குறையும்.

error: Content is protected !!