Home அரசியல் புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்!

புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்!

137

புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்:

தென் தமிழகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உற்றுபார்க்க வேண்டிய முக்கியமான தொகுதி யாகும்..

இத்தகைய சூழலில் திமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 6 பெயர்கள் பரவலாக பேசப்படுகிறது..

அதன் விவரங்கள்

வை. முத்துராஜா (தற்போதைய எம்.எல்.ஏ): அரசுப் பணியைத் துறந்து அரசியலுக்கு வந்தவர். எளிமையான அணுகுமுறை மற்றும் மக்கள் நலப்பணிகள் இவருக்குப் பலம் சேர்க்கின்றன.

மருத்துவர் மு.க. முத்துக்கருப்பன்: பாரம்பரிய அரசியல் பின்னணி கொண்டவர். கொரோனா காலத்தில் செய்த சமூகப் பணிகள் மற்றும் கட்சி மேலிடத்தின் சாதகமான அறிக்கைகளால் பலமான போட்டியாளராகத் திகழ்கிறார்.

கே.கே. செல்லப்பாண்டியன் (வடக்கு மாவட்டச் செயலாளர்): மாவட்டச் செயலாளர் என்ற அந்தஸ்து மற்றும் சமூக வாக்கு வங்கி அடிப்படையில் தீவிர முயற்சியில் உள்ளார்.

எம்.எம். அப்துல்லா (எம்.பி): துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பது இவருக்கு மிகப்பெரிய சாதகம்.

கார்த்திக் தொண்டைமான்: அண்மையில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த இவரும் ரேசில் இணைந்துள்ளார்..

புதுக்கோட்டை சட்டமன்றத்
தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கோரி விருப்ப மனு அளித்தார் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு மகள்
முதுநிலை மருத்துவர் அபிநயா அரசு..

திமுக தலைவரும் தமிழக முதல்வரும் மு. க. ஸ்டாலின் யார் பெயரை டிக் செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!

error: Content is protected !!