“முதல்வன்” திரைபட பாணியில் ஒரு நாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் குடும்ப அரசியலா என்று அதிர்ச்சியில் உறைந்து போன மாற்று கட்சியினர்!

724

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது.

அமைச்சரின் சகோதரர் சிவ. வீ. ஞானப்பிரகாசம்

முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை,இந்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு UDID,முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு மற்றும் மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பங்கேற்காத நிலையில் அவரது சகோதரர் ஆசிரியராக பணியாற்றி சிவ. வீ. ஞானப்பிரகாசம் அவர்கள் மாவட்ட ஆட்சியருடன அருகே நின்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இந்த நிகழ்வு மாற்று கட்சியினர் மத்தியில் பெரும் கேள்விக்குறியாகியாக்கி உள்ளது !

அமைச்சரின் சகோதரர் என்றால் மாவட்ட ஆட்சியருடன சமமாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிடலாமா?

என்றும் கம்மகாடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அமைச்சரின் சகோதரர் ஞானப்பிரகாசம் ஆட்சியர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட செய்தி புதுக்கோட்டையில் குடும்ப அரசியலா என்று மாற்று கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கேள்வியையும் எழுப்பி உள்ளார்கள் !