நளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம்.
சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம்.
கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நளினி-முருகன், சாந்தன் உட்பட அனைத்து கைதிகளையுமே சந்தித்தேன், அனைவருமே முன்விடுதலையையே முன்வைக்கின்றனர்.
வேலூர் சிறையில் ஷூ தயாரிப்பு, தறி விரிவாக்கம் செய்யப்படும்.
வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சட்டம் சிறைதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி.