
“தலைவர் நிரந்தரம்” என்ற சூப்பர் ஸ்டாரின் வாசகத்திற்கு ஏற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் “ராஜா”வாக புதுக்கோட்டையின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளரும் தற்போதைய புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி விஜயபாஸ்கர் எம்பிபிஎஸ் அவர்கள்…
அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்களில் கடந்த கால ஆட்சியில் முக்கிய பொறுப்பு கொண்ட அமைச்சராகவும் சிறப்பான திட்டமிடல், ஆற்றல் மிக்க துரித செயல்பாடுகள், சுறுசுறுப்பு, பேச்சாற்றல், விவேகத்துடன் செயல்படும் திறன் பொன்றவை எல்லாம் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் உன்னிப்பாக அனைவராலும் கவனிக்கப்பட்டவர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர். .
குறிப்பாக கஜா புயல், கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக ஆற்றிய முக்கிய செயல்பாடுகள், மக்கள் மத்தியில் தென் தமிழக மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது…
கடந்த 2021 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கில் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் ஒன்றும் விராலிமலையில் அதிமுகவும் சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பல்வேறு இடர்களுக்கு இடையே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது …
புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களது கட்சிக்காரர்கள் தொடங்கி அனைத்து தரப்பு பொதுமக்கள் இல்ல சுப நிகழ்ச்சிகள் மற்றும் துயர நிகழ்வில் பங்கேற்று அனைவரின் நன்மதிப்பை தொடர்ந்து பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு திமுக அமைச்சர்கள், ஆளும் கூட்டணி கட்சிகளின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் “மவுசு” என்னவோ விராலிமலை சட்ட மன்ற உறுப்பினர் விஜயபாஸ்கருக்கு என்பது அனைவரும் அறிவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ..
குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், வழக்குகள் இருந்தாலும் சோதனைகளை பலவற்றைக் கடந்து தனது அயராது மக்கள் பணியை மீண்டும் மீண்டும் நிருபித்து ஒவ்வொரு முறையும் தான் “ராஜாவாக” புதுக்கோட்டையில் வளம் வருகிறார் முன்னாள் அமைச்சர் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சி . விஜயபாஸ்கர் அவர்கள்..
தொடர்ந்து சீரிய மக்கள் பணி ஆற்றிட NEWSNOWTAMILNADU.COM செய்தி குழுமம் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது!
.