பசங்க பட இயக்குனர் பாண்டிராஜை பணம் மோசடி செய்து ஏமாற்றிய புதுக்கோட்டை சேர்ந்த பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து பாஜா மேலிடம் உத்தரவு!
புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் பிரபல ஜவுளிக்கடை வைத்திருப்பவர் குமார்..

பாண்டிராஜிடன் நிலம் வாங்கித்தருவதாக கூறியும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது, அவர் நிலம் ஒன்றை ஈடாக கொடுத்துள்ளார்.
இதனிடையே அவர் நில பத்திரத்தில் மோசடி செய்தது பாண்டிராஜிக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, காலம் தாழ்த்தியும் தகுந்த பதிலளிக்காமலும் குமார் இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில், பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்ட குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
ஒரு மாத காலம் சிறையில் வெளிய வந்த குமார் பாஜக இணைந்தார்..
மேலும் கட்சியில் மத்திய அரசு பிரிவில் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்..
இந்த நிலையில் கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாண்டிராஜ் தான் குமாரிடம் ஏமாற்றம் அடைந்த நிகழ்வை பகிரங்கமாக தனது பேட்டியில் தெரிவித்தார்..
இயக்குனர் பாண்டிராஜை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…
இதன் தொடர்ச்சியாக பாஜக பிரமுகர் குமாரை பாஜக கட்சியின் பொறுப்புகளில் நீக்கம் செய்து பொறுப்பாளர் லோகநாதன் அவர்களின் அறிக்கை வெளியானது..

புதுக்கோட்டை பாஜக கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..