தொடரும் விராலிமலை வாக்காளர்களுக்கு டோக்கனுடன் கூடிய பணப்பட்டுவாடா..
நடவடிக்கை எடுக்க தயங்கும் தேர்தல் ஆணையம் ! விராலிமலையில் தேர்தல் முறையாக நடைபெறுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி?

874

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது..
இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் முடிவுடையை உள்ள நிலையில்
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அஇஅதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணத்துடன் கூடிய
டோக்கன் வழங்கப்படுவதாக புகார் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

தொடர்ந்து இந்த மாதிரி பல்வேறு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால் விராலிமலை சட்டமன்றத் தேர்தல் முறையாக நடைபெறுமா என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here