புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சி பகுதிகளில் முறையான உட்புறச் சாலை வசதிகள் இன்றி பொதுமக்கள் தடுமாறி வருகின்றனர்..
குறிப்பாக சிவகாமிஆச்சி நகர், ஆப்ரின் நகர், அன்னைநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை அமைப்பதற்காக சாலை ஓர இருபுறங்களிலும் கற்கள் கொட்டி பல நாட்களாகியும் இன்று வரை சாலை வசதி அமைத்துத் தர வில்லை இதனால் அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் வாகன ஓட்டிகள் ரோட்டில் கற்கள் சிதறிக் கிடப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்..
இதற்கு உரிய சாலை வசதி உடனடியாக அமைத்து துரிதமாக வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
.