

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பொன்னனவிடுதி சுற்றுவட்டாரப் பகுதியில் மயிலொன்று கிணற்றில் விழுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சோபனா தேவியிடம் தகவல் கொடுத்தனர்..
உடனே கிராம நிர்வாக அலுவலர் ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மயிலை மீட்டு தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சோபனா தேவிடம் ஒப்படைக்கப்பட்டது..
மயில் தன் இயல்பு நிலைக்கு திரும்பியது அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷோபனா தேவி அவர்களால் மயில் விடுவிக்கப்பட்டது…




தேசிய பறவை மயிலை கிணற்றில் விழுந்து மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை அப்போது சுற்றுவட்டார பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..