கத்தக்குறிச்சி அருகே 30 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் இன்று மாலையும் நாளையும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது வெற்றி பெறும் மாடுகளுக்கு பிரமாண்ட சூழல் கோப்பை, ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ ராக்கம்மாள் மற்றும் பரிவார மூர்த்தி ஆலய வருடாபிஷேகம் சந்தன காப்பு மற்றும் ஸ்ரீ ராக்கம்மாள் கோவில் புரவி எடுப்பு ஸ்ரீ கண்ணுடையார் கோவில் வருடாந்திர பூஜை விழாவை முன்னிட்டு 30 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் இன்றும் 31-08-2024, நாளை 01-09-2024 வெகு சிறப்பாக நடைபெற உள்ளது..
இந்த நிகழ்வை புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் தொழிலதிபர் முத்துப்பட்டினம் எஸ். ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், தொழிலதிபர் திண்டுக்கல் ரத்தினம், கத்தக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் A. சுப்பிரமணியன், நம்புகுழி கார்த்திகேயன், உள்ளிட்டோர் தலைமை ஏற்று நடத்துகிறார்கள்..
மிகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெறும் இந்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு பிரிவுகளில் பந்தயம் நடைபெற உள்ளது
.
வெற்றி பெறும் மாடுகளுக்கு ரொக்கப் பரிசு, பிரம்மாண்ட சுழல் கோப்பை உள்ளிட்டவை நிகழ்ச்சி நடத்தும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்பட உள்ளது..
விழா ஏற்பாடுகளை கத்தக்குறிச்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்…
