தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும்! தென் மாநில எண்ணிக்கை குறையாது-அமித்ஷா!

6

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும்! தென் மாநில எண்ணிக்கை குறையாது-அமித்ஷா!

தொகுதி மறுவரையறைக்கு பிறகு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543இல் இருந்து 816ஆக உயரும்;தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 எம்.பி.க்கள் (7.18%) உள்ள நிலையில் அது 59 எம்.பி.க்கள் (7.23%) ஆக உயரும்.

கேரளா 20இல் இருந்து 30ஆகவும், கர்நாடகா 28இல் இருந்து 42 ஆகவும், ஆந்திராவிற்கு 25இல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17இல் இருந்து 26ஆகவும் உயரும்.

தற்போது தென் மாநிலங்களில் இருந்து 129 எம்பிக்கள் உள்ள நிலையில், அது 195 ஆக உயரும். அதாவது சதவிகித அடிப்படையில் 23.76இல் இருந்து 23.97%ஆக உயரும்.

2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுவரையறை அமலுக்கு வராது-மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்.