ஆட்சியர் கையெழுத்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்!. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் , புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது!
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக திரு. அருணா ஐஏஎஸ் அவர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில் அவரது கையெழுத்து ஒப்புதலுக்காக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
இதனால் புதுக்கோட்டை ஆலங்குடி அறந்தாங்கியில் இலுப்பூர், பகுதிகளில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பல்வேறு வாகன பதிவு சான்றிதழ், புதுப்பிப்பு, அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் கையெழுத்துக்காக வெகுவாக தேங்கிகிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்..
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்..