தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா போதையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்த 4...
கிலோ கணக்கில் தங்கம், 31 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி சொத்து!சாதாரண அரசு ஆபீஸரால் ஆடிப்போன ஹைதராபாத்.
கிலோ கணக்கில் தங்கம், 31 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி சொத்து!சாதாரண அரசு ஆபீஸரால் ஆடிப்போன ஹைதராபாத்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவில் போக்குவரத்து துணை ஆணையருக்கு எதிராக...
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
அதிமுக-வுடன் பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கசியவிடப்பட்ட தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்சிகளை தவெக...















