Home அரசியல் புதுக்கோட்டையில் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக அரசு உயர் அதிகாரிகள் ரகசிய எண்களை LOGIN செய்து...

புதுக்கோட்டையில் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக அரசு உயர் அதிகாரிகள் ரகசிய எண்களை LOGIN செய்து பட்டா மாற்றம்: கலெக்டர் உதவியாளராக இருந்த பிரசன்னா உள்ளிட்ட ரஞ்சித் லதா ஆகியோர் பணியிடை நீக்கம்!இன்னும் பல முக்கிய உயர் அதிகாரிகளுக்கு தொடர்பா! கள ஆய்வில் NEWSNOWTAMILNADU!

19

புதுக்கோட்டையில் புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா மாற்றம்: கலெக்டர் உதவியாளராக இருந்த பிரசன்னா உள்ளிட்ட ரஞ்சித் லதா ஆகியோர் பணியிடை நீக்கம்!

ஆட்சியர் அருணா ஐஏஎஸ்
ஆட்சியரிடம் ஒரு வருடத்திற்கு மேலாக உதவியாளராக இருந்த பிரசன்னா

உயர் அதிகாரிகளின் ரகசிய எண்களை முறைகேடாகப் பயன்படுத்தியது அம்பலம் – தொடர்ந்து விசாரணை!

ரஞ்சித்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதிகள் மற்றும் குளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களைத் தனிநபர்களின் பெயர்களுக்கு முறைகேடாக பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரில், அரசு அலுவலகங்களில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய ரஞ்சித், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் உதவியாளராகப் பணியாற்றி பின்னர் கலால் துறைக்கு மாற்றப்பட்ட பிரசன்னா, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த லதா ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உயர் அதிகாரிகளின் ரகசிய எண்களைப் பயன்படுத்தி முறைகேடு!

பல லட்சம் ரூபாய் லஞ்சம் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக இலுப்பூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ரகசிய எண்களை மூவரும் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இதற்கிடையில், முறைகேடாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!