Home ஆரோக்கியம் புதுக்கோட்டை டீம் ஸ்பெசாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

புதுக்கோட்டை டீம் ஸ்பெசாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

24

டீம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்காகவும், மழைக்காலம் மற்றும் வரும் காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் ,இதனை கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ சங்கம் -புதுக்கோட்டை கிளை மற்றும் டீம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை இணைந்து புதுக்கோட்டை டவுன் இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தமிழரசி அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் கே.ஹெச்.சலீம் அவர்கள் மற்றும் இருக்கை மருத்துவர் அரவிந்த் அவர்கள் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் பரவும்விதம், அறிகுறிகள், தடுக்கும் முறைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் தடுப்பு முன்னெச்செரிக்கை ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவும், ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவும் ,சுய வைத்தியத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தினார்கள். மேலும் அனைவருக்கும் விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவி சஹானா ஆரா அவர்கள் சுகாதார உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். மாணவிகளுக்கு வினா விடை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் திரு காந்தி அவர்கள், திருமதி .மல்லிகா அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.விழிப்புணர்வு நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் திருமதி.சுமதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவமனை மூத்த மேலாளர் சத்தியசீலன், மேலாளர் சந்திர முரளி, மக்கள் தொடர்பு மேலாளர் ஷேக் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியை உணவியல் நிபுணர் திருமதி. மஹாலக்ஷ்மி தொகுத்து வழங்கினார்.

error: Content is protected !!