Home அரசியல் ஆமை வேகத்தில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை சாலை விரிவாக்க...

ஆமை வேகத்தில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை சாலை விரிவாக்க பணி! விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

2

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் பள்ளம் தோண்டி சாலை விரிவாக்க பணியை தொடங்கினர். ஆனால் சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்..

சாலை விரிவாக்கம் செய்யும் இடத்திற்கும் ரோட்டிற்கும் இடையே பெரிய பள்ளம் மூடிட சரளை கற்கள் பயன்படுத்தி உள்ளனர்..

சாலையும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பதோடு விபத்துகளும் நடக்கிறது

சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன..

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு பழைய பேருந்து நிலையம் முதல் டிவிஎஸ் கார்னர் சாலையை துரித படுத்தி அகலபடுத்தவும், வேலையை வேகமாக செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

error: Content is protected !!