புதுக்கோட்டை, ஏப் 17-
தமிழகத்தில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரப்போகிறது. என்று புதுக்கோட்டையில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
புதுக்கோட்டை தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து முன்னாள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்
ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வருகிறது என்ற மகிழ்ச்சியோடு பொதுமக்கள் உள்ளனர். மே 4 தமிழக முதல்வராக பழனிச்சாமி பொறுப்பு ஏற்பதை நீங்கள் பார்ப்பீர்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.
தம்முடைய குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டு முறையாக வீடு திரும்புவார்களா என்று தாய்மார்கள் கவலையுடன் உள்ளனர்.
தமிழக முதல்வர் எல்லாம் சரியாக நடக்கிறது என்று கூறுகிறார். ஆனால், 2080 வழக்குகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஐந்து வருடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் தமிழக அரசு அரசு மருத்துவமனைகளுக்கு கொடுப்பது கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிதி கூட ஒதுக்காமல் தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று இந்தியாவின் சரித்திரத்தை வேறு மாதிரி எழுத உள்ளோம். லோக்சபா தொகுதியை எப்படி குறைக்க முடியும். இது தெரியாமல் முதல்வர் கருப்பு கொடி ஏற்றுகிறார்.
தமிழகம் 39 லிருந்து 59 ஆக லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை உயர போகிறது. 2029ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், புதுக்கோட்டை எம்.பி., தொகுதி மீண்டும் உருவாகுது. அதேபோன்று, 33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது .
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குதலில் தி.மு.க., 70 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
தி.மு.க ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை அரசு அதிகாரிகள் முதல் சமூக ஆர்வலர் வரை யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக உதயநிதி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு அடிமை கட்சியாக தி.மு.க உள்ளது. ராசாவின் ஆடியோ டேப் தற்போது வெளியே வந்துள்ளது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் புழல் சிறையில் ஒரு பிளாக் கட்டி அதில் 13 தி.மு.க., அமைச்சர்கள் உள்ளே போவார்கள் இது உறுதி என்று பேசினார்.















