கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் ‘படித்த பண்பாளர்’ பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து: தலைமைக்கு குவியும் ஆதரவு!

2

கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ரேஸில் ‘படித்த பண்பாளர்’ பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து: தலைமைக்கு குவியும் ஆதரவு!

புதுக்கோட்டை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள பட்டதாரி ஆசிரியர் எம். மாரிமுத்து அவர்களுக்குப் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே பலத்த ஆதரவு பெருகி வருகிறது.

கல்விப்பணியோடு மக்கள் பணி : திருமயத்தைச் சேர்ந்த ஆசிரியர் மாரிமுத்து, கல்வித்துறையில் மாவட்ட பொறுப்புக் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் இவர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர். பொதுவாக அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செயல்படும் நிலையில், இவர் அதிமுக அரசின் சாதனைகளையும், சலுகைகளையும் ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு சென்ற களப்போராளியாக அறியப்படுகிறார்.

அரசியல் பாரம்பரியம் : இவரது குடும்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் விசுவாசமான குடும்பமாகத் திகழ்கிறது. இவரது துணைவியார் திருமதி M. சரசு அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாகக் கிளைச் செயலாளராகவும், தற்போது தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மாரிமுத்து அவர்களும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து, கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு விசுவாசமாகப் பணியாற்றி வருகிறார்.

வெற்றி வாய்ப்பு ஏன்?🎯

🎯செல்வாக்கு: சாரண இயக்க ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் எனப் பல்வேறு தளங்களில் பணியாற்றியதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் இவருக்குப் பெரும் பலமாக அமையும்.

🎯மக்களுடன் தொடர்பு: விடுமுறை காலங்களிலும், ஓய்வு நேரங்களிலும் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு, அதிகாரிகளை அணுகித் தீர்வு காண்பதில் வல்லவர்.

🎯தலைமையுடன் இணக்கம்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தொகுதியின் எதிர்பார்ப்பு : விவசாயத்தைச் சார்ந்த கந்தர்வகோட்டை தொகுதியில் நீர்நிலை தூர்வாருதல், பாசன வசதி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தரமான மருத்துவ வசதிகளை முன்னெடுக்க ஒரு படித்த, அனுபவம் வாய்ந்த வேட்பாளர் தேவை என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

“படித்த பண்பாளர், களப்போராளி மாரிமுத்து அவர்களுக்கு வாய்ப்பளித்தால், கந்தர்வகோட்டை தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி” என மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.