பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.
உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை.
மத்திய பட்ஜெட் 2026-27 – தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
புனிதமான தைப்பூச நாளிலும் ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட் தாக்கல்
- நிர்மலா சீதாராமன் “மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்”
-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்
பாஜக அரசின் சீரிய நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரித்துள்ளது
-நிர்மலா சீதாராமன்
செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு
அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவுக்கு அறிமுகம்
மத்திய பட்ஜெட் 2026-27
மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9ஆவது முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது.
அரசின் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பலனடைகின்றனர்.
சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
BUDGET2026
விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
முக்கிய கடமைகள்.
3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும்.
அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம்.
எஸ்எம்இ உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து முக்கியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இளைஞர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது.
அனைவருக்கும் வளர்ச்சி என்பது மத்திய பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்.
நிதி அமைச்சகம், தனது கர்த்தவ்ய பவன் அலுவலகத்தில் தயாரித்த முதல் பட்ஜெட் இது.
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு
பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்
குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
“மூலதனச்செலவு ரூ.12.20லட்சம் கோடியாக உயர்வு”
- நிர்மலா சீதாராமன்
புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு
கோயில் நகரங்களுக்கு
முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்
நிர்மலா சீதாராமன்
“சென்னை – பெங்களூரு; சென்னை – ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைகிறது”
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
“ஜவுளித்துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்”
உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம்
- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்












