பாமகவில் அதிரடி திருப்பம்: செயல் தலைவராக ஸ்ரீ காந்தி நியமனம் – அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது?
திண்டிவனம்: பாமகவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. தைலாபுரம் தோட்டத்தில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாமகவின் புதிய செயல் தலைவராக டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர் உள்ளிட்ட 22 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அன்புமணி தொடர்ந்து பாமக பெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரையும் பயன்படுத்துவதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியா அல்லது மாநில கட்சியா? யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.









