உதயநிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அமைச்சர் ரகுபதி!

64

அதிமுகவில் போட்டியிட ஆள் இருக்கிறதா..? என்பதை பார்ப்பதற்காகவும், ஆள தேடி பிடிக்க வேண்டும் என்பதற்காகவும்… யாரும் கட்சியை விட்டு யாரும் போய் விடக்கூடாது என்பதற்காகவும் தான் அதிமுக முன்கூட்டியே விருப்பமனுவை வாங்குகிறது.

யாரா இருந்தாலும் நாங்கள் அன்பாக தான் அரவணைப்போம்.
நாங்கள் யார்கிட்டயும் எதிர்ப்பு காட்டும் கட்சி அல்ல. எல்லோரையும் தோழமையோடு அரவணைப்பவர்கள் தான் நாங்கள்.

கொள்கை மாறுபாடுகள் தான் ஏற்படுமே தவிர,யாருடனும் குஸ்தி போடுபவர்கள் நாங்கள் அல்ல.

எங்களுடையது கொள்கை கூட்டணி,எங்களது திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொண்டால் யாரோடும் சேர்ந்து பணியாற்ற தயார்.

ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி உள்ளார், எங்களது 2 கோடி தொண்டர்களும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்,

உதயநிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை

திருவண்ணாமலையில் சிறப்பாக நடந்து முடிந்தது திமுக இளைஞர் மாநாடு

புதுக்கோட்டையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி