9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நாளை பதவியேற்றுக் கொள்வார்கள் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.

393

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் புதன்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவோ, பங்களிக்கவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியடையவர் ஆவார்கள் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here