ஜிஎஸ்டி குறித்து இன்று ஒரு விரிவான கூட்டம் நடைபெற்றது; பிப்ரவரி தொடக்கத்தில் நடக்க இருந்த கூட்டம் பட்ஜெட், பாராளுமன்ற கூட்டத்தொடர், மாநிலத் தேர்தல்கள் காரணமாக கூட முடியவில்லை.
இன்று 43 வது GST கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
கொரோனா தொடர்பான நிவாரண பொருட்களின் இறக்குமதிகளுக்கு மாநிலங்களின் பரிந்துரையின் பேரில் ஜிஎஸ்டியில் இருந்து 2021 ஆகஸ்ட் 31 வரை விலக்கு.
தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு (Mucormycosis பூஞ்சை பாதிப்பின் சிகிச்சைக்கு தேவைப்படும்) Amphotericin B ஐஜிஎஸ்டி விலக்களிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐஜிஎஸ்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் Amphotericin B சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் விலை குறைப்பது பற்றி முடிவெடுக்க, அமைச்சர்கள் கூட்டம் நாளைக்குள் கூட்டப்படவுள்ளது. இந்தக் குழு ஜூன் 8ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்.
கடந்த வருடத்தை போன்றே, தலைகீழ் வரியை திருத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று GST Council கருதியதால், அதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
தாமத கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
தாமத கட்டணத்தின் அதிகபட்ச அளவு குறைக்கப்பட்டுள்ளது; வருங்கால வரி சமயங்களில் அமலுக்கு வரும்.
சிறு GST வரி தாரர்களுக்கு இது நீண்டகால நிவாரணம் அளிக்கும்.
சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க தாமத கட்டணத்தை குறைக்கும் சலுகை திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜிஎஸ்டி வரிசெலுத்தும் 89 % பேருக்கு பயன் கிடைக்கும் வகையில் நிலுவையில் உள்ள வரிக்கணக்குகளை குறைக்கப்பட்ட தாமதக் கட்டணத்துடன் தாக்கல் செய்யலாம்.
ரூ. 2 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் உள்ள சிறு வரி செலுத்துவோர்க்கு 2020-21 ஆண்டிலும் வருடாந்திர வரி தாக்கல் கட்டாயமில்லை.
ரூ. 5 கோடி அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் உள்ள வரி செலுத்துவோர் 2020-21 ஆண்டுக்கான இணக்க அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
என்றார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்*