Home அரசியல் மூன்று நாட்கள் தான் தமிழக முதல்வர் விழா! விமர்சனங்களை தவிடு பொடியாக்கி முதல்வர் நிகழ்ச்சியை சிறப்பாக...

மூன்று நாட்கள் தான் தமிழக முதல்வர் விழா! விமர்சனங்களை தவிடு பொடியாக்கி முதல்வர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர். முகமது பர்வேஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம் !

22

மூன்று நாட்கள் தான் முதல்வர் விழா!

விமர்சனங்களை தவிடு பொடியாக்கி முதல்வர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் பர்வேஸ் !

நவம்பர் 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொதுமக்களின் நீண்ட நாள் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நவீன பேருந்து நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பயணத்தின் போது பாரம்பரிய விவசாய விளைபொருட்கள், உள்நாட்டு நெல் ரகங்கள், முந்திரி மற்றும் சிறுதானியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட சிறப்புக் கண்காட்சியையும் பார்வையிட்ட முதலமைச்சர், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகளைத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்துப் பரிமாணத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கக் கூடிய இந்த புதிய பேருந்து நிலையத் திறப்பு விழா அப்பகுதி மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..

புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை முன்னிட்டு NO பேனர்…NO கட்-அவுட்…!!!

புதுக்கோட்டைக்கு முதல்வர் வருகையையொட்டி, நகரம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள் எதுவும் வைக்கப்படாதது வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.

இந்த அணுகுமுறைக்கு அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!

அதை போல முதல்வர் வருகை நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இரவு பகல் பாராமல் பம்பரமாகச் சுழன்ற மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..

இத்தகைய நடைமுறை மற்ற மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக அமையட்டும்!

முதலமைச்சர் புதுக்கோட்டை வருகையை சிறப்பாக செயல்பட்டு கையாண்ட தமிழக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் அமைச்சர் முகமது பர்வேஸ் !

error: Content is protected !!