புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை பிடித்து இழுத்து, குளக்கரை பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அந்த சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நழுவ முயற்சித்த போது, 3 பேரில் ஒருவர், சிறுமியை கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடினர். சிறுமியை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயற்சித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி?
சந்தேகிக்கிறது..
புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
புதுக்கோட்டை...
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!
9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...
தவெக-வின் தீர்மானங்கள்!
தவெக-வின் தீர்மானங்கள்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம்
பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...















