தேனி: காதலனின் கழுத்தை நெரித்து இளம்பெண் கொன்று தீ வைத்து எரித்தும் விட்டார்.. ஆனால், இந்த இப்படி ஒரு கொடூர கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுகொடுத்ததே, அந்த பெண்ணின் சொந்த அக்கா, வித்யா என்பவராம்.. இந்த சம்பவத்தினால் தேனியே ஆடிப் போய் கிடக்கிறது..! தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், பாலூத்து என்ற இடம் உள்ளது.. இங்குள்ள ஒரு புதரில் கடந்த 21-ந்தேதி ஒரு ஆண் பிணம் கிடந்தது… அது எரிந்த நிலையில் கிடந்தது. உடனடியாக தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசாரும் அந்த சடலத்தை மீட்டனர்.. எப்படியோ கொலை செய்யப்பட்டு 2 , 3 நாள் ஆன மாதிரி தெரிந்தது.. இறந்து போனது திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பது தெரியவந்துது.. இவருக்கு 29 வயதாகிறது. இந்த ஆனந்தராஜ் தான் காணாமல் போய்விட்டார் என்று கடந்த கடந்த 15-ந்தேதி விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.. பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் கொலை செய்யப்பட்டுதான் இறந்திருக்கிறார் என்பது உறுதியானது. ஆனால், யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? சொந்த ஊர் எங்கோ இருக்க, இந்த ஊருக்கு இவர் ஏன் வந்தார்? என்ற கேள்விகளும் எழுந்தன.. இதற்காகவே 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அப்போதுதான், ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தியை லவ் பண்ணிகொண்டிருந்தார் என்பதும், காதலியை பார்ப்பதற்காகவே இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விஜயசாந்தியை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில் விறுவீடுவில் உறவினர் பிரபாகரனுடன் விஜயசாந்தி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அவரை விரட்டி பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது விஜயசாந்தி சொன்னதாவது: “நான் ஆனந்தராஜை உயிருக்குயிராக காதலித்தேன்.. ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.. ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.. நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன்.. அப்போது எங்களுக்குள் தகராறு வரவும், ஆத்திரத்தில் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டோம்.. அந்த சடலத்தின் மீதும் பெட்ரோல் ஊற்றியும் எரித்து விட்டோம். பிறகு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம்.. இந்த கொலைக்கு பிளான் போட்டு கொடுத்ததே என் அக்கா வித்யா தான்” என்றார். இதையடுத்து, விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.
- Advertisement -
Latest article
திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா போதையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்த 4...
கிலோ கணக்கில் தங்கம், 31 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி சொத்து!சாதாரண அரசு ஆபீஸரால் ஆடிப்போன ஹைதராபாத்.
கிலோ கணக்கில் தங்கம், 31 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி சொத்து!சாதாரண அரசு ஆபீஸரால் ஆடிப்போன ஹைதராபாத்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவில் போக்குவரத்து துணை ஆணையருக்கு எதிராக...
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!
அதிமுக-வுடன் பியூஷ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கசியவிடப்பட்ட தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்சிகளை தவெக...















