தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ________________
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து, 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் ராசிபுரத்தில் உள்ள நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்து வருகின்றனர்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதால் சோதனையின் முடிவில் எவ்வளவு ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது என்ற விவரமும் முறைகேடுகளுக்கு உட்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.















