தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது.
வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு...
கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்
கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்
சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக வழக்கறிஞரணி...
கந்தர்வகோட்டை அடுத்த மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!
மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை:ஆக17புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல்...















