சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல்!

14

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரை
விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வந்தார்.
மதுரையிலிருந்து மேலூர் திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வரும் வழியில் காரைக்குடி வருமான வரி அலுவலகம் அருகே விஜய் வந்தபோது, காரில் இருந்து திடீரென கீழே இறங்கி
சைக்கிளை வாங்கி ஓட்டினார்.
விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் சீனிவாசன் சேதுபதி அவர்களை ஆதரித்தும், காரைக்குடியில் டாக்டர் பிரபு அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்தும் திறந்த பேனில் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். அதிகாலை ஆறு மணி முதலே பொதுமக்கள் காரைக்குடி புது பேருந்து நிலையம் அருகே குவிய தொடங்கினர். காவல்துறை அனுமதியின் படி மதியம் 2:30 மணிக்குள் பரப்புரை நிறைவு செய்ய வேண்டும் என்பதை ஏற்று, பரப்புரை செய்யாமல் விஜய் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
வழி நெடுகிலும் பல்லாயிர கணக்கில் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். சாலை ஓரங்களில் இருந்து தமிழக வெற்றி கழக கட்சி துண்டுகளையும், சால்வைகளையும், மலர் மாலைகளையும், விஜய்யைக்கு அளித்தனர்
அவைகளைப் வாங்கி விஜய் மீண்டும் மக்களுக்கு அளித்தார் . மிகுந்த உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் காரைக்குடிக்கு விஜய் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.