Home அரசியல் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் முக்கியப் பிரமுகருமான பாபு உடல் நிலை குறித்து தகவல் என்ன?

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் முக்கியப் பிரமுகருமான பாபு உடல் நிலை குறித்து தகவல் என்ன?

16

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் முக்கியப் பிரமுகருமான பாபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த மருத்துவப் பதிவுகள் (Medical Bulletin) மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்து கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக எந்தவிதமான புதிய Update-ம் வெளியிடப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் மர்மத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாலைந்து நாட்களுக்குத் தொடர்ந்து வெளிவந்த தினசரி மருத்துவ அறிக்கைகள் திடீரென முழுமையாக நிறுத்தப்பட்டதுடன், தற்போது அவரது உண்மையான உடல்நிலை என்னவென்று கேட்டால் மருத்துவர்களும் சரி, கட்சித் தரப்பும் சரி எதையுமே வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன் என்று மௌனம் காப்பது மக்களிடையே பலத்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினரின் உடல்நல நிலைப்பாடு குறித்து நேரில் சென்று விசாரித்துத் தகவல்களைத் திரட்ட முயலும் செய்தியாளர்களுக்கும் நிருபர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் சரி, பாதுகாப்புத் தரப்பிலும் சரி எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படாமல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும், சபாநாயகர் அல்லது அமைச்சர் யாராவது மட்டும் பொத்தாம் பொதுவாக ஏதோ சொன்னாலும் இவர் குறித்த தகவல்களை முழுமையாக மூடிமறைப்பதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் அல்லது பெருமளவிலான மர்மங்கள் உள்ளதா என்ற நியாயமான கேள்விகளையும் கோபங்களையும் பொதுமக்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் எழுப்பியுள்ளது.

error: Content is protected !!