இன்றைய தலைப்புச் செய்திகள்!

12

இன்றைய தலைப்புச் செய்திகள்!

🗞️ திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு. ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.

🗞️ மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டி காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிட வாய்ப்பு.

🗞️ திருச்சி ரயில்வே அலுவலக நுழைவாயிலுக்கு வைத்த இந்தி பெயர் நீக்கம். அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.

🗞️ இலங்கை கடற்பகுதியில் ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா. நீர்மூழ்கி குண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 87 பேர் உயிரிழப்பு.

🗞️ டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து. அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியை எளிதில் வீழ்த்தி அசத்தல்