Home Uncategorized இன்று தலைவர்கள் தேர்தல் பிரசாரம் எங்கு எங்கு?

இன்று தலைவர்கள் தேர்தல் பிரசாரம் எங்கு எங்கு?

161

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 14) பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு வேலூரிலும், அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருப்பத்தூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , மதியம் 3 மணிக்கு ஆண்டிப்பட்டியிலும், மாலை 5 மணிக்கு மதுரையிலும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 9 மணிக்கு சிவகங்கையிலும், மாலை 5 மணிக்கு ராமநாதபுரத்திலும் வாக்குச் சேகரிக்கிறார். இதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மதியம் 3 மணிக்கு திருப்பூரில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தலைவர்களின் வருகையை ஒட்டி அந்தந்தப் பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

error: Content is protected !!