மதுரை பொன்மேனி பகுதியில் நெளரோஜி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பாசமாக மேக்ஸ் புரோவ்னி என்ற பெயருடன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்..
இன்று அதிகாலை 12 மணி அளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டினுள் பாம்பு ஒன்று நுழைந்தது இதைக் கண்ட வீட்டின் செல்லப் பிராணியான மேக்ஸ் புரோவ்னி வீட்டின் நுழைவாயிலில் வந்த பாம்பை வீட்டில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பாம்பு உடனடியாக அருகிலுள்ள செடிக்குள் சென்று ஒளிந்து கொண்டது மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நாய் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த பாம்பை வீட்டினுள் நுழைய விடாமல் தடுத்தது ஒரு கட்டத்தில் பாம்பு செடியினுள் இருந்து வெளியே வராத காரணத்தால் எஜமானரை அழைப்பதற்காக அந்த செல்லப்பிராணி மேக்ஸ் புரோவ்னி சென்றது அதற்குள் அந்த பாம்பு வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டது நாய் குரைப்பதை அறிந்த எஜமானர் சென்று பார்த்ததில் எதும் இல்லை என்றவுடன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் பாம்பு ஒன்று வீட்டில் வந்து வெளியே சென்றதை பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார் கடவுள் போல் காப்பாற்றிய செல்லப்பிராணி மேக்ஸ் புரோவ்னியை குடும்பத்தினர் அனைவரும் பாசமுடன் வணங்கினர் .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்