விழுப்புரம் மாம்பழப்பட்டு :
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்க சாலை ஓரம் கொடிக்கம்பம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் தினேஷ் என்ற சிறுவனும் அமைச்சரை வரவேற்க கொடி கம்பம் நடு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அப்போது மேலே சென்ற உயர் மின் அழுத்த மின்சார கம்பி கொடி கம்பத்தில உரசி மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இது போன்ற உயிர் பலிகள் ஏற்பட்டு இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதிருக்கும் நிலையில் மீண்டும் அது போன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.