Home அரசியல் விருப்ப கடிதம் கொடுத்ததின் பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு


விருப்ப கடிதம் கொடுத்ததின் பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு

1320

விருப்ப ஓய்வு கோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.சகாயம், தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக அவா் உள்ளாா். கடந்த அக்டோபா் 2-ஆம் தேதியன்று விருப்ப ஓய்வு கோரி அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா்.

இதையடுத்து, அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். ஆவார்.

error: Content is protected !!