புதுக்கோட்டை மாவட்டம் நகர் தலைமை ஆவின் பால் அலுவலம் அருகில் கல்யாணராமபுரத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்!
வீட்டுமனைகள் முதல் ரியல் எஸ்டேட் அதிபர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வரை புதுக்கோட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் அப்ரூவல் வழங்க இங்கு எதை தொட்டாலும் லஞ்ச தர வேண்டுமாம்..
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கோயம்புத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட சூப்பர்வைசர் ராஜேந்திரன் சற்று அடக்கி வாசி தொடங்கினாலும் குறிப்பு- (சற்று தான் அடக்கி வாசிப்பதாக) வரைவாளார் சுரேஷ் மற்றும் சர்வேயர் பிச்சைமணி உதவி கூட்டணியுடன் புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குநர் அப்ரூவல் வாங்க வரும் நபர்களிடம் நேரடியாக லாவகமாக பேசி லஞ்ச பணத்தை குறிப்பிட்ட இடத்தில் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
மேலும் புதுக்கோட்டையில் அவர் தங்கி பணி மேற்கொண்டாலும் அடிக்கடி அவ்வப்போது சென்னையை இருந்து திருச்சி வரை விமானபயணம் மூலம் தொடர்ந்து பணிக்கு வரும் உதவி இயக்குநர் பிரபாகரன் பின்பு புதுக்கோட்டை அலுவலகத்திற்கு சொகுசு கார் மூலம் வலம் வருவதாக கூறப்படுகிறது..
பாவம் நேரத்தை சற்று மிச்சப்படுத்தி அலுவலகத்தில் முழுப் பணியில் ஈடுபட்டு வருகிறார் போல உதவி இயக்குநர் பிரபாகரன் ..
எது எப்படி இருப்பினும் “உப்பு திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்” என்ற வாசத்திற்குப் ஏற்ப சட்டம் தன் கடமையை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இது சம்பந்தமாக துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்துள்ளது..