முக கவசம் அணியாமல் வந்ததை தட்டிக்கேட்ட நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்

981

தாம்பரம், ஆக 25
சென்னை அடுத்த தாம்பரம் நகராட்சியில்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும்மருத்துவ முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது

கிழக்கு தாம்பரம், ரோஜா தோட்டம், திலகவதி தெருவில், மருத்துவ முகாம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அருள் நகரைச் சேர்ந்த, , தினேஷ் என்பவர், முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவரது வாகனத்தை, நகராட்சியின் சுகாதார ஆய்வாளர், செந்தில் என்பவர் நிறுத்தி, முககவசம் அணியுமாறும், மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் கூறினார்.
அதை மறுத்த தினேஷ், செந்திலை ஒருமையில் பேசி உள்ளார். அதை, துப்புரவு மேற்பார்வையாளர், குமாரசாமி வயது 58 என்பவர் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், கபசுர குடிநீர் வைத்திருந்த நாற்காலியால் குமாரசாமியை, தினேஷ் தாக்கிய தாக கூறப்படுகிறது

இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்

நகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் நகராட்சி ஆணையாளர் சித்ரா சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் மற்றும் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here