பொதுமக்கள் அரவணைப்பில் திருமயம் அஇஅதிமுக வேட்பாளர் பிகே. வைரமுத்து..

706

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்படுகிறது..

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்த
புதுக்கோட்டை திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி. கே. வைரமுத்து..

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரகுபதி மற்றும் அவரை எதிர்த்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. கே வைரமுத்து மீண்டும் எதிரெதிரே களம் காண்கின்றனர்..

எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர் எனவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பை பெற்றதால் இவருக்கு கழக மாநில விவசாய அணி செயலாளர் மற்றும் வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

15.3.2021 அன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் வைரமுத்து..

பல்வேறு தடைகளை தாண்டி எங்கள் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிகே. வைரமுத்து மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று அஇஅதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் களப்பணி ஆற்றி வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here