தமிழகம் முழுவதும் கடந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் பி ஆர் ஓ மற்றும் ஏபி ஆர் ஓ மாற்றம் செய்யப்பட்டனர்..
இதன் தொடர்ச்சியாக சென்னையில் பணிபுரிந்த திமுக சேர்ந்த பேச்சாளர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட மதியழகன் புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.. உதவி செய்தி மக்கள் தொடர்பாளராக அரியலூரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பாரதி என்பவர் புதுக்கோட்டைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்..
ஏற்கனவே பணிபுரிந்த புகைப்படக்காரர் பாலு என்பவரது மூவர் கூட்டணியில் மாவட்ட ஆட்சியர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் முன்னதாகவே சென்று செய்தியாளர்களுக்கு எல்லாம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று தவறான வார்த்தைகளை பயன்படுத்தியும் தங்களது பிஆர்ஓ வாகனங்களுக்கு டீசல் போட வேண்டுமென்றும் நிகழ்ச்சி நடத்தும் ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகளிடம் பணத்தை லாகவமாக பெற்றுக் கொண்டு மூன்று பேரும் பிரித்துக் கொள்வதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
இதை தவிர அரசு விழாக்கள் குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்வது வழக்கம்.. இதிலும் கமிஷன் வைத்து பணம் கையடாபடுவதாக கூறப்படுகிறது..
வாடகை வாகனங்களில் செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் செல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அந்த வாகனங்களில் வாடகையில் கமிஷன் வைத்து பணம் கையடாபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் செய்தி தொடர்பாளர் அரசு அலுவலராக பணிபுரிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செல்லும் இடம் எல்லாம் வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள பிஆர்ஓ, ஏ பி ஆர் ஓ, மீது
மதிப்புக்குரிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!