இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கராம விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் நியமனம் செய்யப்படவுள்ளது.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது நியமனம் தொடர்பாக கீழ்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்ப
தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்.எஸ். ஆபீஸ் ( M.S.office) அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் பணி நியமன விதிகள் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12 ஆயிரம் மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இப்பணியிடம் பகுதி நேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு வார கால இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். வயது வரம்பு அரசு விதிகளின்படி
இப்பணியிடத்திற்கு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையரின் நேர்முக கடித எண்; 30652/சஉதி-3/2020, நாள்:10.03.2021 இன்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணி நியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ளன.
இந்நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டவையாகும்.
இந்நியமனம் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர் தாய், தந்தை பெயர் தேசிய இனம், வகுப்பு, பிறந்த தேதி, இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எண், கைபேசி எண், கல்வித் தகுதி, தொழில்நுட்ப கணினி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் கல்லூரி மாற்று சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள்; கெசட்டட் ஆபிசரின் மேலொப்பம் பெற்று மாவட்ட ஆட்சியர், சத்துணவுத் திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,விடுத்துள்ள செய்தி குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.