
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 41வது ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்பு, மகளிர் மேம்பாடு வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகம் செயல்படும் என ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் தகவல்..
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி டிஎன்பிஎஸ்சி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை இயக்குனராக இருந்த கவிதா ராமுவை தமிழக அரசு நியமித்தது.
இதனையடுத்து கவிதாராமு இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக கையப்பமிட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு:-
சமூகப் போராளி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மண்ணில் மாவட்ட ஆட்சியராக தன்மை நியமித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி என்றும் முதலமைச்சர் கூறியதுபோல பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேபோல் மகளிர் மேம்பாடு வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகம் செயல்படும் என்றும் எந்த ஒரு விஷயத்தையும் தனது நேரடி கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விற்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.