புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் துணை போகுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது!
கண்டுகொள்ளமால் இருக்கும் மாதம் மாதம் கப்பம் கட்டப்படுவதாக பகிரங்கமாக தெரிவிக்கும் திரையரங்க நிர்வாகம் !
தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விதித்துள்ள நிர்ணய கட்டணத்தை விட பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம், போதிய கழிப்பறைகள் உள்ளனவா,சுத்தமாக உள்ளதா, கட்டிடங்கள் பராமரிப்பில் உள்ளதா, ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கு உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்கு முறைச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது…
அதே போல திரையரங்கு கேண்டீன்களில் தங்கள் சுய லாபத்துக்காக தரமற்ற உணவு பொருட்களை, கெட்டு போன சிற்றுண்டிகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன..
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..