புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி பராமரிப்பில் 11 துவக்க பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் 3 உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன..
இவ் பள்ளிக்கூடங்கள் அனைத்து ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில் பள்ளி ஆசிரியர்கள், தலைமைச் ஆசிரியர்கள் பழுதான கட்டிடங்கள், புதிய வகுப்பறைகள், அமைத்த தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.. இவர்களது கோரிக்கை ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர்மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில் உறுதி அளித்தார்.. தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தியும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முறையிட்டார்கள்.. இதன் தொடர்ச்சியாக 19 பள்ளிகள் புனரமைக்க ரூபாய் 6.53கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..



இப்பணிகள் அனைத்தும் 6 மாத காலத்தில் முடிவடையும் என்று நகர் மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில் உறுதி அளித்துள்ளார்கள்..
பள்ளிகள் பராமரிப்புக்காக, புனரமைக்க, புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுக்கு புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்…