புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

357

கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது!

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம்

கம்பன் கழகத் தலைவர் மரியாதைக்குரிய எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

கூடுதல் செயலாளர் புதுகை சா பாரதி அனைவரையும் வரவேற்றர்.

கம்பன் கழகச் செயலாளர் ரா.சம்பத்குமார் விழா பற்றி விளக்கிக் கூறினார்.

ஜூலை 14 வெள்ளிக்கிழமை தொடங்கி
ஜூலை 23 ஞாயிற்றுக்கிழமை வரை பத்து நாட்கள் பெருவிழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

வழக்கம் போல் நகர்மன்றத்தில் இவ்விழா நடைபெறும்.
சிறந்த தமிழ் அறிஞர்களைப் பத்து நாட்களும் அழைத்து
நிகழ்ச்சிகளை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

தினமும் மாலை 5.30 தொடங்கி 9:30 வரை நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
துணைத் தலைவர்கள் எம்ஆர்எம் முருகப்பன்,
பேக்கரி மகராஜ் அருண் சின்னப்பா,

பொருளாளர் சி கோவிந்தராஜன்,
பொருளாளர் கறு. ராமசாமி,
இணைச்செயலாளர்கள்
காடுவெட்டி குமார்,
பேராசிரியர் வெ. முருகையன்,
தொழிலதிபர் ரா. கருணாகரன்
ஆகியோரும்

விழா குழு உறுப்பினர்கள்
அனுராதா சீனிவாசன்
பேராசிரியர் மாரியப்பன்
நிலவைப் பழனியப்பன்
பேராசிரியர் ரவிச்சந்திரன்
ஆசிரியர் காசி ராஜேந்திரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here