புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டான்குடி பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது.
இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள பயன்தாரர்கள் இந்த நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கி பயன் பெற்றுவருகின்றனர்..
இந்த கட்டிடம் சுமார் 30வருடம் பழமையானது என்று கூறப்படுகிறது..
இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்ட் காண்ட்ராக்டில் வெடிப்புகள் ஏற்பட்டும் கட்டிடங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் நியாயவிலைக் கடைக்கு வரும் பயனாளிகள் பெரும் அச்சுறுத்தலாக வந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..
எனவே பொதுமக்கள் நலன் கருதி நியாயவிலைக் கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் விரைவில் புதியகட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…