புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கை பொருத்தி சாதனை!

528


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா துள்ளுகோட்டை கிராமத்தை சேர்ந்த 38 வயது ராகினி என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடலியல் மருத்துவம் மற்றும்
மறுவாழ்வுத்துறை( Department of Physical medicine and Rehabilitation-PMR) பிரிவில் செயற்கை கை பொருத்துவது பற்றி ஆலோசனை பெறவந்தார்..


அவர் 20வருடத்திற்கு முன்பு இயந்திரத்தில் அடிப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். 20 வருடமாக அவதிப்பட்டு வந்தவர்க்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் செயற்கை கை இலவசமாக வரவழைக்கப்பட்டு உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வத்துறை பிரிவு மூலமாக அதனை பொருத்தி உரிய பயிற்சி அளித்து செயற்கை கையுடன் அனைவரையும் போல் கையை மடக்குவதற்கு, கையில் பொருட்கள் எடுப்பதற்கு சொல்லி தரப்பட்டது.

அவர் இப்போது தனக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை கூடியுள்ளதாக தெரிவித்தார்.இந்த செயற்கை கை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் ராகினிக்கு செயற்கை கையை வழங்கி, எலும்பு முறிவு இணை பேராசிரியர்க்கும், உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வத்துறை மருத்துவர்கள் கீதா மற்றும் பத்மராணி அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here