புதுக்கோட்டையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளரை அறிமுகம் செய்து தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கிய நாம் தமிழர்கட்சியினர்..

1045
தன்னை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் என்று அறிமுக செய்து கொண்ட சசிகுமார்

வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 50% வேட்பாளர் பட்டியலை கடந்த மாதம் அக்கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டார் .. இதில் புதுக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக திரு. சசிகுமார் அவர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதி முழுவதும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக செம்பட்டி விடுதி நால்ரோடு, ஆதனக்கோட்டை, வாராப்பூர் போன்ற பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சசிகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வேட்பாளரை அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டி வரைவின் முக்கிய கூறுகளை எடுத்துரைத்து புதுக்கோட்டை தொகுதி மக்களுடன் கலந்துரையாடி பேசி தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர் ..

இந்த நிகழ்வில் வேட்பாளர் சசிகுமாருடன் சட்டமன்ற தொகுதி தலைவர் வே. கு. கருப்பையா துணைத்தலைவர் பொன்வாசிநாதன் துணைத்தலைவர் சண்முகநாதன் சு. ப.கண்ணன் துணைச் செயலாளர் கோபி இணைச்செயலாளர் சசிகுமார் பொருளாளர் வீரப்பன் செய்தி தொடர்பாளர் திருலோகசந்தர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வருகின்றனர்..

உடன் புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here