பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டு சென்றார்
டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேச வாய்ப்பு
தமிழகத்தில் விஷச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், அதிமுக, பாஜக தனித்தனியே புகார் மனு அளித்தது
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? என்றும் தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியிருந்தார்
தமிழகத்தில் விஷச்சாராய சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது