நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் #டாக்டர்சிவிஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாகை, கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் 465 அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தேவை ஏற்படின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அவசர ஊர்திகள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.